சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிக்கு (SIR) எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ (த.வெ.க.) உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், அதே சமயம் தி.மு.க. மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

SIR எதிர்ப்பை தி.மு.க. வாக்கு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டிய அவர், தி.மு.க. சார்பில் நடத்தப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் த.வெ.க. பங்கேற்காததற்குக் காரணம் இதுதான் என்றும் விளக்கமளித்துள்ளார்.

மேலும், SIR-க்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டிய விஜய், ஆளும் கட்சியான தி.மு.க. மட்டும் ஏன் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை? என்றும் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.