சர்வதேச ஜூ-ஜிட்சு வீராங்கனையும், தற்காப்புக் கலைப் பயிற்சியாளருமான ரோஹிணி கலாம் (35), மத்தியப் பிரதேசத்தின் தேவாஸில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விளையாட்டுத் துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற பெருமைக்குரிய வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவல் அறிந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரோஹிணி கலாமின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தத் தற்கொலைக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை என்பதால், காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
