சத்தீஸ்கரின் நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதியில் இருந்து வெளிவந்த ஒரு நெகிழ்ச்சியான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில், ஒரு சிஆர்பிஎஃப் (CRPF) கோப்ரா கமாண்டோ, தனது மொபைல் போனில் கார்ட்டூன் வீடியோ ஒன்றை பழங்குடியினச் சிறார்களுக்கு காட்டி, அவர்களுடன் தூய மகிழ்ச்சியின் தருணத்தை பகிர்ந்து கொள்வதைக் காணலாம்.

அந்த சிறுவர்கள் இதுபோன்ற கார்ட்டூன் வீடியோக்களை முதல் முறையாகப் பார்த்ததாக கூறப்படுகிறது. வீடியோவில், அடர்ந்த காட்டின் மத்தியில் ஜவானின் தொலைபேசியைச் சுற்றி ஆர்வமுடன் அமர்ந்திருக்கும் சிறுவர்கள், புன்னகையிலும் ஆச்சரியத்திலும் முகம் மலர்ந்திருப்பது மனதை நெகிழ வைக்கிறது.

இந்த மனம் தொடும் காணொளியை ஒரு “X-ல் பயனர் பகிர்ந்துள்ளார். அவர், சத்தீஸ்கர் காடுகளில் முதன்முறையாக பழங்குடியினக் குழந்தைகளுக்கு தனது தொலைபேசியில் கார்ட்டூன் காட்டும் ஒரு CRPF கோப்ரா ஜவானின் வீடியோவைப் பார்த்தேன். நக்சல் பாதிப்பால் இந்த குழந்தைகள் குழந்தைப்பருவத்தின் சாரத்தையும் கல்வியையும் இழந்துள்ளனர் என்பதில் வருத்தம். அவர்களுக்காக ஏதாவது செய்ய முடியுமென நம்புகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகளும், உணர்ச்சிப் பூர்வமான கருத்துகளும் கிடைத்துள்ளன. ஜவானின் கருணை, மனிதநேயம், இரக்கம் ஆகியவற்றை பாராட்டி பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தச் சிறிய தருணம், ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் மத்தியில் கூட மனித உணர்வு உயிரோடிருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு அரிய எடுத்துக்காட்டாக நெட்டிசன்களால் வரவேற்கப்படுகிறது.