சென்னையில் ஏற்பட்ட மழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு விளம்பரப் பலகையை அடிப்படையாகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத் தரப்பினர் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சாலை முழுவதும் முட்டி அளவுக்கு மழைநீர் தேங்கி, பொதுமக்கள் தண்ணீரில் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர்; வாகன ஓட்டிகளும் வாகனங்களை இயக்க சிரமப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, வீடியோ எடுத்த நபர் கேமராவை பேருந்து நிறுத்தம் நோக்கி திருப்ப, அங்கிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் விளம்பரப் பலகை காட்சியளிக்கிறது.
வச்சான் பாரு ஆப்பு கடைசில 😂👏😁😅😅😅
Don’t miss the ending 🔥🔥🔥#திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி #WeStandWithVIJAY #திருட்டு_திமுக #தமிழகவெற்றிக்கழகம் #Resign_Stalin #டூபாக்கூர்சீமான் #DMKUruttugalumThiruttugalum pic.twitter.com/aXgDE9jc2l
— ☆Vijay ☆ᖰƦ♬ƙ♬នϦ ᵐᵘˢⁱᶜ🩵🩷🎼🎙️ (@vjprakashmusic) October 21, 2025
“>
அந்த பலகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்துடன் “மழைநீரை சேகரிக்க ஆரம்பிக்கலாமா?” எனும் வாசகம் இடம்பெற்றிருந்தது. இதே வேளையில், அந்த பலகையின் கீழே முட்டி அளவுக்கு தேங்கி நிற்கும் மழைநீரை சுட்டிக்காட்டி, “இது மழைநீர் சேகரிப்பா அல்லது மக்களின் அவல நிலையா?” என வெற்றிக் கழகத் தரப்பினர் கேளியும் கிண்டலுமாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்திறன் மீதும், திமுக அரசின் மழை மேலாண்மை மீதும் மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
