நடிகர் அஜித் குமார் தற்போது ஜெர்மனியில் நடைபெறும் சர்வதேச கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, சில மாதங்கள் திரையுலகிலிருந்து இடைவேளையை எடுத்துக்கொண்டு, தனது நீண்ட நாள் ஆசையான கார் பந்தயத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளார்.
கார் ரேஸை கடைபிடிக்கும் இவரது பங்கேற்ப்பை நேரில் பார்த்த ரசிகர்கள், அஜித்தை சந்தித்து தங்களது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர். அவர்களை சந்தித்த அஜித், “கார் ரேஸை எனக்காக பிரபலப்படுத்த வேண்டாம். இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களைப் பற்றி பேசுங்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் மனதாலும், உடலாலும் மிகுந்த உழைப்புடன் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
#Ajithkumar: Lot of people thinks motorsports is very easy🏎️. Promote motor sports, not for me, promote for Indian motor sports🫡👏. Let people know how Tough it is Physically & Emotionally🫰. We have more Indian drivers, maybe one day India will win F1 World champion🏆♥️ pic.twitter.com/W6oCHtzTBF
— AmuthaBharathi (@CinemaWithAB) August 31, 2025
அவர்களின் உழைப்புகள் பலருக்கு தெரியாது. ஆனால், ஒரு நாள் இந்தியர்கள் அனைத்துவிதமான கார் பந்தயங்களிலும் சாம்பியன்கள் ஆகுவார்கள்,” என கூறினார். அவரது பேச்சு, கார் ரேஸுக்காக அவர் கொண்டுள்ள பாசத்தை பிரதிபலிக்கிறது.
AK65 என பெயரிடப்பட்டுள்ள அடுத்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். ஆனால், அதற்கு முன்னதாக கார் பந்தயத்தில் வெற்றி பெறும் நோக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் அஜித், தனது புதிய பக்கம் ஒன்றை ரசிகர்களுக்குக் காட்டி வருகிறார். அவரது உற்சாகம் மற்றும் இந்திய கார் பந்தய வீரர்களுக்கான ஆதரவு, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
