டெல்லியை சேர்ந்த 2 சிறுமிகள் ஆன்லைன் விளையாட்டுகளை தொடர்ந்து விளையாடி வந்தனர். அப்போது ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த க்ரிஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் க்ரிஷ் அந்த சிறுமிகளை தொடர்பு கொண்டு நாம் தொடர்ந்து ஆன்லைனில் விளையாடலாம்.

அதற்கான வழிகள் எனக்கு தெரியும் என் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த இரண்டு சிறுமிகளும் வீட்டில் யாரிடமும் கூறாமல் பானிபட் பகுதிக்கு சென்றடைந்தனர். இதற்கிடையே சிறுமிகள் காணாமல் போனதால் அவர்களது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி சிறுமிகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு சிறுமிகளையும் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிகளை வரவழைத்த கிரிஷையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்