தமிழக மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில், இனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதிய மின்னணு ரேஷன் கார்டுக்கு www.tnpds.gov.in என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ என்பதை கிளிக் செய்து ஆன்லைனில் நேரடியாக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தில் கேட்ட தகவல்களை நிரப்பி, தேவையான ஆதார ஆவணங்களை (ஏதாவது அடையாள அட்டை, முகவரி சான்று போன்றவை) அப்லோட் செய்தால் போதும்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 30 முதல் 45 நாட்களுக்குள் அதன் நிலை குறித்து அரசு தகவல் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கை மக்கள் சுமையை குறைக்கும் வகையிலும், தாமதத்தை தவிர்க்கும் வகையிலும் அமைய இருக்கிறது.
