உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரெயில் நிலையத்தில் தாய் மற்றும் அவரது ஒரு வயது பெண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, கழிவறைக்கு சென்ற தாய் திரும்பி வந்தபோது குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நடவடிக்கை எடுத்த போலீசார், ரெயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஒரு மர்ம நபர் அந்த பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு ரெயிலில் ஏறி செல்லும் காட்சி பதிவாக இருந்தது.

தற்போது அந்த நபரை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக தேடுதல் வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.