தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் பாடிய ‘உங்க விஜய், உங்க விஜய் உயிரென வரேன் நா…’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. மேலும், மாநாட்டில் திரண்டிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களுடன் விஜய் செல்பி வீடியோ ஒன்றையும் எடுத்தார். இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டதும், அது இணையத்தில் கணக்கின்றி பகிரப்பட்டு, மிகப்பெரிய அளவில் வைரலாகியது.
இப்போது, அந்த வீடியோ 10 கோடி பார்வைகள் மற்றும் 1 கோடிக்கும் மேல் லைக்குகளை தாண்டி, விஜய் வெளியிட்ட இன்ஸ்டா பதிவுகளிலேயே உயர்ந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இது அவரது ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநாட்டின் வெற்றியும், ரசிகர்களிடம் விஜய்க்கு உள்ள பிரபலமும் இந்த சாதனையை சாத்தியமாக்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
“>
