பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (72) மீது ஊழல் மற்றும் பண மோசடி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவற்றில் ஒரு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், தற்போது அவர் ராவல்பிண்டி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த 2023ஆண்டு மே 9-ம் தேதி அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டபோது, நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி, போலீசாருக்கும், இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இம்ரான் கானின் மருமகன் ஷாஹ்ரேஸ் கானை பஞ்சாப் மாகாணம் லாகூரில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கைது அங்குள்ள அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
