ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாதபட்டினம் பகுதியில் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த நல்லி ராஜூ (27) என்பவர், 8 ஆண்டுகளுக்கு முன்பு மவுனிகா (25) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இதற்கிடையில், மவுனிகாவிற்கு அதே ஊரைச் சேர்ந்த குண்டு உதயகுமார் என்ற இளைஞருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த ராஜூ, மனைவியை எச்சரித்தும், மவுனிகா தனது கள்ளக்காதலை தொடர்ந்தார். இதனால், கணவரை அகற்றி, கள்ளக்காதலருடன் வாழ்க்கை வாழ திட்டமிட்டார்.
భోజనంలో నిద్రమాత్రలు ఇచ్చి భర్తను చంపిన భార్య
శ్రీకాకుళం జిల్లా, పాతపట్నంకు చెందిన మౌనిక తన భర్త అయినా రాజుకు భోజనంలో నిద్రమాత్రలు కలిపి ప్రియుడితో కలిసి ఊపిరి ఆడకుండా చేసి చంపేసింది
ఇద్దరు పిల్లలు ఉన్నా.. తన వివాహేతర సంబంధానికి భర్త అడ్డుగా ఉన్నాడని ఈ ఘాతకానికి పాల్పడింది pic.twitter.com/QmC0AVzmfm
— greatandhra (@greatandhranews) August 15, 2025
“>
அதன்படி, கடந்த 5-ஆம் தேதி, மவுனிகா சமைத்த உணவில் 10 தூக்க மாத்திரைகள் கலந்து கணவருக்கு கொடுத்தார். அதனை உண்ட ராஜூ ஆழ்ந்த தூக்கத்தில் மயங்கியபோது, உதயகுமார் தனது நண்பர் மல்லிகார்ஜூனுடன் சேர்ந்து வீட்டுக்கு வந்து, தலையணை வைத்து அமுத்தி மூச்சுத்திணறச் செய்து கொலை செய்தனர். பின்னர், இருசக்கர வாகனத்தில் ராஜுவின் உடலை எடுத்துச் சென்று, குடியிருப்பு பகுதியில் வீசி விட்டு சென்றனர். அடுத்த நாள் காலை பிணம் கண்டெடுக்கப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை மேற்கொண்டு, சிசிடிவி காட்சிகளை பரிசோதித்ததில், கொலை நடந்த தினம் சந்தேகத்திற்கிடமாக உதயகுமார் மோட்டார் சைக்கிளில் மூட்டை ஒன்றுடன் சுழன்றது தெரியவந்தது. இதையடுத்து மவுனிகா மற்றும் உதயகுமார் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். அப்போது மவுனிகா, தனது கள்ளக்காதலருடன் இணைந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து மவுனிகா, உதயகுமார் மற்றும் மல்லிகார்ஜூன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
