எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பி விமான ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 48 தொகுதிகளில் வாக்கு திருட்டு நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்து ஆதாரங்களை வெளியிட்டார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மிந்தா தேவி என்ற பெண்ணுக்கு 124 வயது என்று பதிவு செய்யப்பட்டிருப்பதை ராகுல் காந்தி சுட்டி காட்டினார். வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை கண்டித்து கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று பிரியங்கா மற்றும் சில காங்கிரஸ் பெண் எம்பிக்கள் மிந்தா தேவியின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்த டீ ஷர்ட்டை அணிந்திருந்தனர். அந்த டீ-ஷர்டின் பின்பகுதியில் 124 நாட் அவுட் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மிந்தா தேவி என கூறப்படும் அந்த பெண்ணுக்கு 35 வயது தான் ஆகிறது.

இவர் பீஹார் மாநிலம் பிரபுநாத் நகரில் வசிக்கிறார். இந்த நிலையில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி பிரியங்கா போராட்டத்தில் ஈடுபட்டதால் கோபமடைந்த மிந்தா தேவி, எனது புகைப்படத்தை டீ-ஷர்டில் அச்சிட்டு அணிந்து கொள்ள பிரியங்கா காந்திக்கு என்ன உரிமை உள்ளது? அவர் யார்? என் சொந்தக்காரரா?

எதற்காக எனது அனுமதி இல்லாமல் என் புகைப்படத்தை உபயோகப்படுத்தினார்? இதனால் மன உளைச்சலில் உள்ளேன். அதிக பிரச்சனைகளை சந்திப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. அந்த டீ-ஷர்ட்டை பார்த்துவிட்டு எனது நண்பர்களும் உறவினர்களும் என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். என்னால் வெளியே செல்ல முடியவில்லை.

வீட்டை சுற்றி நிருபர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். பிரியங்காவின் செயலால் பாதிக்கப்பட்டுள்ளேன். பிரியங்கா பிரச்சாரத்திற்கு என்ன ஏன் உபயோகப்படுத்துகிறார்? நான் சாதாரண குடும்பப் பெண்தான். அவரது செயல் என்னை வேதனைப்படுத்தியுள்ளது. என்னை பலிகடா ஆக்கக்கூடாது.

வாக்காளர் பட்டியலில் உள்ள எனது வயது தவறை சரி செய்து கொடுத்தாலே போதுமானது. தான் நான் எனது கணவர் குழந்தைகளுடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்கிறேன். எனது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பிரியங்கா நடந்து கொண்டார். எனக்கு நல்லது செய்வதாக நினைத்து தொல்லை ஏற்படுத்துகின்றனர்.

இதை எப்படி பிரியங்கா எனக்கு கொடுத்த ஆதரவாக நினைக்க முடியும்? என்னை தவறான முறையில் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த தவறுக்கு நான் காரணம் இல்லை. அதிகாரிகள் தவறை திருத்துவதாக கூறியுள்ளனர். அப்படி இருக்கும்போது எனது முகவரியை பிரியங்கா வெளிப்படுத்தி நாடு முழுவதும் எனக்கு தொந்தரவை ஏற்படுத்தி இருக்கிறார் என பாதிக்கப்பட்ட பெண் ஆக்ரோஷமாக பேசியுள்ளார்