தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நடிகை சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே மோனிகா பாடலுக்கு நடனமாடியுள்ளார். கூலி படம் ரஜினிகாந்த் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படத்தில் ரெய்லர் நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி சோசியல் மீடியாவில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் கூலி படத்தில் இடம் பெற்ற மோனிகா பாடல் யூடியூப்பில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது.
