கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஃபசீலா, கடந்த ஜூலை 29ஆம் தேதி தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வந்த ஃபசீலா, தனது தாய் வீட்டுடன் தொடர்பில் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டின்   அருகே சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கு முன்னதாக, தனது தாயிடம் ஃபசீலா அனுப்பிய கடைசி செய்திகளில், “நான் இறக்கப்போகிறேன், இல்லையென்றால் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்” என எழுதியிருந்ததையே அடிப்படையாக கொண்டு, அவரது மரணம் சந்தேகத்துக்கிடமானதாக கருதப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஃபசீலாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, ஃபசீலாவின் கணவர் நௌபால் மற்றும் அவரது தாயார் ரம்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். தற்கொலைக்குப் பின்னணி குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த துயரச்சம்பவம் இடப்பெயர்ந்து வாழும்  பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.