மலையாளத் திரைப்பட நடிகை ஹனி ரோஸ். இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் நடிகர் நந்தமரி பாலகிருஷ்ணன் உடன் வீரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து ஆந்திராவில் பிரபலமானார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு பாய் பிரண்ட் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா திரையுலகில் அறிமுகமானவர்.

இருப்பினும் திரை துறையில் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி பல வணிக நிறுவனங்கள், கடை திறப்பு விழாக்களில் கலந்து கொள்கிறார். இதனிடையில் ஹனிரோஸ் சமீபத்தில் பேசி உள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில் அவர் கூறியதாவது, “காதல்தான் உலகில் மிக அழகான விஷயம் மனித வாழ்க்கை என்பது காதல் இல்லாமல் முழுமை அடையாது. என்னுள்ளும் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் அது இப்போது இல்லை. என் வாழ்க்கையில் சரியான துணையைத் தேடி காத்திருக்கிறேன். இதுவரை அப்படி ஒருவர் என் பார்வையில் விழவே இல்லை. அப்படிப்பட்ட நபரை நான் பார்த்தால் நிச்சயம் விடமாட்டேன்” என கூறியுள்ளார்