
தமிழ் திரைப்பட நடிகர் சசிகுமார் தற்போது சத்திய சிவா இயக்கத்தில் “ப்ரீடம்” திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் வரும் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சசிகுமார் கூறியதாவது, இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்க வேண்டும். அவர்களும் தமிழ் மொழி பேசுபவர்கள் வேறு நாட்டிற்கு சென்றாலும் இங்கிருந்து தான் சென்று இருப்பார்கள்.
அவர்களை வேறு நாட்டவர்கள் என்று பார்க்காமல் நம் மொழி பேசுபவர்கள் என பார்க்க வேண்டும். மேலும் டூரிஸ்ட் ஃபேமிலி, பிரீடம் போன்ற திரைப்படங்கள் மூலம் இவை நடக்கும் என எதிர்பார்க்கிறேன்.
வெளிநாடுகளில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்கின்றனர். அதேபோன்று நம் நாட்டிலும் அவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை என தெரிவித்துள்ளார்.