
பென்டாஸ்டிக் போர், சார்ம்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஜூலியன் மெக்மஹோன். இவர் நடித்த ஃபென்டாஸ்டிக் போர், ரைஸ் ஆப் தி சில்வர் சர்பர் உள்ளிட்ட திரைப்பட கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. இவருக்கு 56 வயது ஆகிறது. இவரது மனைவி கெல்லி மெக்மஹோன்.
இந்த நிலையில் நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த ஜூலியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினாலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் சர் வில்லியம் மெக்மஹோனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.