
மகாராஷ்டிரா மாநிலத்தின் தாராஷிவ் மாவட்டத்தில், ஒன்பது வயது சிறுமி சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததைத் தொடர்ந்து, அதிர்ச்சிகரமாக அவரது தந்தை கோபத்தில் கொலை செய்துவிட்டார். இந்த கொடூரச் செயல், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சிறுமி கௌரிக்கு தாயார் இல்லாத நிலையில், அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலை, கௌரி தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்தார். இது அவரது தந்தை ஞானேஷ்வர் ஜாதவுக்கு அதீத கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குடிபோதையில் இருந்த அவர், தூங்கிக்கொண்டிருந்த தனது மகளைக் கோடரியால் தாக்கி கொலை செய்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்குப் பிறகு, கௌரியின் உடலை வீட்டில் 24 மணி நேரம் வைத்திருந்த ஞானேஷ்வர். பின்னர் இந்த சம்பவம் தெரிந்ததும், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தாராஷிவ் மாவட்டத்தின் பரண்டா தாலுகாவில் அமைந்துள்ள வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது. “தந்தை தன் பத்மசூசித்த மகளின் இறப்புக்கு காரணம்,” என ஆம்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோரக்ஷநாத் காரத் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, கடந்த வாரம் சாங்லி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி சாதனாவை, மாதிரித் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், அவரது தந்தை அடித்துக் கொன்றது மீண்டும் ஞாபகம் வருகிறது. மாணவர்கள் மீது அதிகமான எதிர்பார்ப்பும், கட்டுப்பாடற்ற கோபமும் இவ்வாறு குழந்தைகளின் உயிரை கேள்விக்குள்ளாக்கி வருகிறது என்பதே இந்த சம்பவங்கள் மூலம் தெளிவாகிறது.
இருவரும் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்காக உழைப்பவர்களாக இருந்தும், கொடூரமான முடிவுகள் எடுப்பது, சமூக அக்கறையும், உளவியல் சிந்தனையையும் தேவைப்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது. மேலும் தற்போது போலீசார் ஞானேஷ்வர் ஜாதவ் மீது கொலை குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளனர்.