திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி அருகே அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மிகப் பெரிய பிரம்மாண்டமான ஸ்டுடியோ ஒன்றை கட்டியுள்ளார்.

அந்த ஸ்டுடியோ சிறந்த தொழில்நுட்பங்களால் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஸ்டூடியோவிற்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

மேலும் இருவரும் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏ.ஆர். ரகுமான் மத்திய இணை மந்திரிக்கிடையான சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.

இதுகுறித்து எல். முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மிகச் சிறந்த தொழில்நுட்பங்களால் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய ஸ்டூடியோவை பார்வையிட அழைத்தார்.

அதனால் ஒரு நட்பு ரீதியாக மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி என்ற முறையிலும் நேரில் சென்று பார்வையிட்டேன். அதில் எந்த அரசியலும் கிடையாது”எனக் கூறியுள்ளார்.