
சோனிபட் மாவட்டம் சோனிபட்-கோஹானா சாலையில் ஏற்பட்ட ஒரு பரபரப்பான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை, ரத்தன்கர் அருகே, ஒரு ஃபார்ச்சூனர் காரை ஓட்டிச் சென்ற நபர், திடீரென தனது காரை ஒரு பேருந்தின் முன்னால் நிறுத்தினார். பின்னர், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துச் சுழற்றியதோடு, பேருந்து ஓட்டுநரையும் பயணிகளையும் மிரட்டிய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த வழியாக சென்ற ஜிந்த் டிப்போவின் பேருந்தில் ஏற்பட்டது. பேருந்து டெல்லிக்குச் செல்லும் வழியில் பயணிகளை ஏற்றி சென்றுகொண்டிருந்தது. அச்சமயம், அந்த ஃபார்ச்சூனர் ஓட்டுநர் தனது வாகனத்தை திடீரென பேருந்தின் முன்னால் நிறுத்தியதோடு, துப்பாக்கியை எடுத்துக்காட்டி, ஓட்டுநரிடம் கோபமாக பேசி மிரட்டினார். மேலும், பயணிகள் மீது மோத முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
बस के सामने अड़ाई गाड़ी, पिस्टल निकालकर हवाबाजी की
◆ वीडियो जींद-सोनीपत रुट पर गोहाना से सोनीपत के बीच का बताया जा रहा
◆ बस में बैठे एक यात्री ने यह वीडियो बनाया #ViralVideo #Haryana #Jind pic.twitter.com/JvAJwHKocT
— News24 (@news24tvchannel) July 1, 2025
பயணிகள் இந்த சம்பவத்தைக் காணக் கூடிய வகையில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் துப்பாக்கியை சுழற்றி அச்சுறுத்தும் காட்சிகள் தெளிவாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து, சதார் காவல் நிலையம் மற்றும் CIA-1 பிரிவினருடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை அலசி, முகமது சஞ்சய் கான் என்ற டெல்லியைச் சேர்ந்த நபரை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். அவர்மீது இந்திய குற்றச் சட்டத்தின் புதிய பிரிவு BNS 110ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் உறுதியான நடவடிக்கையால் மக்கள் நிம்மதியாக இருப்பதோடு, இதுபோன்ற சமூக விரோத சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. “சாலையில் பயணிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய பொறுப்பு அரசுக்கும் காவல்துறைக்கும் உள்ளது” என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் தற்போது இந்த வழக்கு தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.