கஜகஸ்தானில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் வகையில் ஹிஜாப் போன்ற துணிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானின் முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் இல்லை. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக இங்கு முஸ்லிம்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து மதம் தொடர்பான கட்டுப்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

பெண்கள் முகத்தை மூடும் வகையில் ஜாப் ஹிஜாப் அணிவது முஸ்லிம் மதத்தில் கட்டாயம் கிடையாது. ஆனால் அணிய வேண்டும் என்று திணிக்கப்பட்டுள்ளது. இங்கு பள்ளிகளில் இந்த ஹிஜாப் துணி அணிவதற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவியர் அணிவதற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொது இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கும் வகையில் கஜகஸ்தான் பார்லிமெண்டில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.