தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வரும் தனுஷ். தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான குபேரா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஸ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

குபேரா திரைப்படத்தை அமீகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

குபேரா படத்தின் டிரைலரும் பாடல்களும் அடுத்தடுத்த ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது விவேகா எழுதிய “என் மகனே” பாடல் வெளியாகியுள்ளது.