
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக கட்சியின் தலைவர் அமீர் கிஷோர் காஷ்யப். இவர் கடந்த மாதம் 12ஆம் தேதி இரவு நேரத்தில் தன்னுடைய கட்சி அலுவலகத்திற்கு காரில் வந்தார். அங்கு கட்சி அலுவலகத்தில் இருந்த ஒரு ஊழியரை கிஷோர் வெளியே அனுப்ப நிலையில் பின்னர் அவரது காரில் இருந்து ஒரு பெண் இறங்கி அவசரமாக கட்சி அலுவலகத்திற்குள் சென்றார். அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்ற கிஷோர் திடீரென அவரை கட்டிப்பிடித்தார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் கட்சியின் தலைமை அலுவலகம் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக கிஷோர் கூறுகையில் அந்த பெண், பாஜக கட்சியின் தொண்டர் ஆவார்.
அந்தப் பெண் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் கூறியதால் கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றேன். அலுவலகத்தில் உள்ள படிக்கட்டுகளில் ஏறும்போது திடீரென அந்த பெண்ணுக்கு தலை சுற்றல் ஏற்பட்டதால் அவரை நான் தாங்கிப் பிடித்த கைத்தாங்கலாக அழைத்துச் சென்றேன். மேலும் இது தொடர்பாக அவதூறு வீடியோ பரப்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.