மெட்ரோ ரயிலில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. அதாவது மெட்ரோ ரயிலில் ஏறுவதற்காக சிலர் வரிசையாக காத்திருந்தபோது ஒரு பெண் பயணி மற்றொரு பெண் பயணியின் பையில் இருந்து பிட்பாக்கெட் அடிக்க முயல்கிறார். இதனைப் பார்த்த ஒரு பெண் திடீரென விசில் அடித்து அவரை தடுத்த நிலையில் திருடி திருடி என அவர் கத்துகிறார்.

 

உடனடியாக திருடிய பெண்ணின் ஆண் நண்பன் அந்த பெண்ணை பையால் அடித்துவிட்டார். அந்தப் பெண் திருடி திருடி என பலமுறை கூறிய நிலையிலும் அங்கிருந்தவர்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் எப்போதுமே தங்களுடைய உடைமைகளை கவனமாக வைத்திருப்பது அவசியம் எனவும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.