இங்கிலாந்தில் உள்ள தென்கிழக்கு பிராந்தியமான ஆக்ஸ்போர்ட்ஷையர் நகரில் விமானப்படை ராணுவ தளம் ஒன்று அமைந்துள்ளது. அதில் ஃபோர் பயிற்சி, வழக்கமான ராணுவ பயிற்சிகள் நடைபெற்று வந்தன. தற்போது பயிற்சி இராணுவ தளங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே பழைய ராணுவ தளம் தற்போது ஆயுதங்கள், வெடி மருந்துகள் வைக்கும் கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அப்பகுதியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அப்பகுதிக்கு அருகில் உள்ள இடங்களிலும் தீ வேகமாக பரவி அப்பகுதி முழுவதும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது.

இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதி முழுவதும் பரவிய தீயை பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அணைத்தனர். ஆனால் அந்தத் தீ விபத்துக்குள் சிக்கி தீயணைப்பு வீரர்கள் உட்பட 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் அந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து அறிந்த அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டாமர் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.