ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் 6ஆவது உச்சி மாநாடு மே 16ஆம் தேதி 2025 அன்று அல்பேனியாவில் உள்ள டிரானாவில் நடைபெறுகிறது. இதில் 40க்கும் மேற்பட்ட ஐரோப்பிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி பிரதமர், மெலோனி அல்பேனியா வந்துள்ளார். அவரை அல்போனியா பிரதமர் எடி ராமா சிகப்பு கம்பளத்தின் மீது முழங்காலிட்டு வணக்கம் தெரிவித்து வரவேற்றார்.

இந்த சம்பவம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. அல்பேனிய பிரதமரின் வரவேற்பு மூலம் இத்தாலிக்கும், அல்பேனியாக்கும் இடையிலான நெருங்கிய உறவை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.