சென்னை உயர்நீதிமன்றத்தில் நீட் தேர்வை சரியாக எழுத முடியாததால் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என கூறி 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதாவது கடந்த 4-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் போது ஆவடியில் உள்ள ஒரு பள்ளியில் கனமழை பெய்ததோடு அங்கு மின்தடையும் ஏற்பட்டது. அந்த பள்ளிக்கூடம் மழை நீர் புகுந்ததால் மாணவர்களால் சரிவர தேர்வு எழுத முடியவில்லை.

சுமார் 1.15 மணி நேரம் மழைநீர் புகுந்து மின்தடை ஏற்பட்டதால் 15 மாணவர்கள் மீண்டும் மறு தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.