
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் இன்று இரண்டாவது நாளாக சோதனை தொடர்கிறது. கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கு மேலாக விசாகன் வீட்டில் சோதனை நடைபெறும் நிலையில் நேற்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதேபோன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, அண்ணா நகரில் உள்ள மேகநாதனின் ரியல் எஸ்டேட் அலுவலகம் உட்பட 12 இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறார்கள். மேலும் இதில் ஆகாஷ் பாஸ்கரன் பராசக்தி மற்றும் நடிகர் தனுஷின் இட்லி கடை உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்