
சமீப காலமாக சமூக வலைதளங்களில் பிராங்க் வீடியோக்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இவை பொழுதுபோக்கிற்காகவும், மக்களின் இயல்பான எதிர்வினைகளைப் பதிவு செய்யவும் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில், ஒரு பேக்கரிக்கு முன்பு நடந்த ஒரு பிராங்க் நிகழ்ச்சி இணையத்தில் வைரலாகி, ஒரு பெண்மணியின் பெருந்தன்மையை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. இரண்டு இளைஞர்கள் நடத்திய இந்த பிராங்கில், ஒருவர் தின்பண்டங்கள் வாங்கியதாகவும், மற்றவர் கடைக்காரராக நடித்து பணம் கேட்பதாகவும் காட்சி அமைக்கப்பட்டது. அந்த இளைஞர், அருகில் நின்ற ஒரு பெண்மணியை சுட்டிக்காட்டி, “எங்க அம்மாவிடம் பணம் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு சென்றுவிட, அந்தப் பெண்மணி எந்தவித தயக்கமும் இல்லாமல் பணத்தை எடுத்து கொடுத்தார்.
இந்த நிகழ்வு ஒரு பிராங்க் என்பது அந்தப் பெண்மணிக்கு தெரியாது. ஆனால், தன்னை “அம்மா” என்று அழைத்த இளைஞரை அவர் உடனடியாக மன்னித்து, அவருக்காக பணம் கொடுத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பிராங்கை உருவாக்கிய இளைஞர்கள், “அந்தப் பையனை உங்களுக்கு தெரியாது, பின்னர் ஏன் பணம் கொடுத்தீர்கள்?” என்று கேட்டபோது, அந்தப் பெண்மணி, “என்னை அம்மான்னு சொன்னானே, என் பையன் சொல்லியிருந்தா கொடுக்க மாட்டேனா? அதான் கொடுத்துட்டேன், விடுங்க” என்று பெருந்தன்மையாக பதிலளித்தார். இந்த பதில் அவரது அன்பையும், மனிதநேயத்தையும் பறைசாற்றியது. இந்த நிகழ்வு வீடியோவாக இணையத்தில் பரவ, மக்கள் அவரது புரிதலையும், பெரிய மனதையும் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram