மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீப காலமாக மராத்தி மற்றும் ஹிந்தி தொடர்பான பிரச்சனை நடந்து வருகிறது. இதுகுறித்த செய்திகளும் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். இதனை டெலிவரி ஊழியரான ரோகித் லவாரே என்பவர் கொடுப்பதற்காக வந்த நிலையில் அந்த பெண் அவரிடம் மராத்தியில் பேசுமாறு வலியுறுத்தியுள்ளார்.

 

 

ஆனால் அவர் தனக்கு மராத்தி தெரியாது ஹிந்தி மட்டும் தான் தெரியும் என கூறியதற்கு அந்த பெண்ணும் அவருடைய கணவரும் சேர்ந்து அவருடன் மராத்தியில் பேசுமாறு கட்டாயப்படுத்தி தகராறு செய்துள்ளனர்.

அந்தப் பெண் தொடர்ந்து மராத்தியில் பேசினால் மட்டும்தான் பணம் கிடைக்கும் என கூறிய நிலையில் ரோகித் மராத்தியில் மட்டும்தான் பேச வேண்டும் என யார் கூறினார்கள் என கேட்கிறார். இருப்பினும் அந்த பெண் இரும்பு கதவின் பின்னால் நின்று தொடர்ந்தே தகராறு செய்த நிலையில் இதனை ரோகித் தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த பெண் கடைசிவரை அந்த ஊழியருக்கு பணம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மராத்தியில் பேசுபவர்கள் மட்டும்தான் ஆர்டர் கொண்டுவர வேண்டு என்று முன்பே கூறியிருந்தால் அந்த ஊழியருக்கு இவ்வளவு அழைச்சல் மற்றும் மன சங்கடம் ஏற்பட்டு இருக்காது என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.