
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலுக்காக தயாராகி வருகிறார். நடிகர் விஜய் திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை விமர்சித்து வரும் நிலையில் இன்று பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிலையில் நாளை சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. நாளை காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் பெயர்களை கொண்டு வருமாறு விஜய் அறிவுறுத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்தக் கூட்டத்தில் விஜய் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.