
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நபர், இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை ஆதரித்து, தனது நாட்டையே வெளிப்படையாக விமர்சித்திருப்பது தற்போது சர்வதேச ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பெய் என்ற நபர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், இந்திய ராணுவத்திற்கு மனப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளதோடு, தனது நாட்டின் பயங்கரவாத வளர்ப்பைத் குற்றம் சாட்டியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது, “நான் பாகிஸ்தானியன். நேராகச் சொல்றேன். இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இருந்தது. நீங்கள் முதலில் அவர்களது மக்களை தாக்குகிறீர்கள், பிறகு அவர்களது பதிலைப் பார்த்து, திடீரென மனித உரிமைகள், அமைதி பேச ஆரம்பிக்கிறீர்கள். ஆனா 26 பேரைப் பாகிஸ்தான் தாக்கி கொன்றப்போ எனக்கே கோபம் வந்தது” என கூறியுள்ளார்.
View this post on Instagram
இந்த வீடியோவில், “இந்தியா இதை தொடங்கலை. அவங்க பதில்தான் கொடுத்தாங்க. அது போர் இல்லை, அது நியாயம்,” எனவும், “பயங்கரவாதத்தை வளர்க்குற பக்கத்தில் அமைதி பேசுறது எளிது. ஆனா பாதிப்பை உணர வேண்டியது அவ்வளவு சாதாரணம் இல்லை” எனவும் தெரிவித்துள்ளார். மேலும், “நான் ஒரு பாகிஸ்தானிய இந்து. இது தான் என் மனசாட்சியின் பதில். ஜெய்ஹிந்த்!” என்று வீடியோவின் கடைசி வரிகளில் தெரிவித்துள்ளார்.