ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவியதால் ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

மீதமுள்ள போட்டிகள் வருகிற 17-ஆம் தேதி முதல் தொடங்க போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியதாவது, ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் போது அவற்றில் பாடல்கள், டிஜே, பெண்கள் நடனம் என எதுவும் இருக்கக்கூடாது என விரும்புகிறேன்.

தீவிரவாத தாக்குதலில் சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐபிஎல் போட்டிகளில் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.