பாலிவுட் நடிகை உர்வசி ரவ்தேலா கடந்த ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் ஏற்பட்ட விபரீதமான தருணம் தற்போது மீண்டும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 2024ல் நடந்த விழாவில், வெள்ளை நிற ஸ்டிராப்லஸ் ஃகவுன் அணிந்து வந்த உர்வசி, ரீவால்விங் கதவின் அருகில் தனது உடை சிக்கியதால் வெளியே வர முடியாமல் தவித்தார்.

அப்போது எடுக்கபட்ட வீடியோ தற்போது இணையத்தில் பரவுகிறது. இந்த ஆண்டு கான்ஸ் 2025 விழாவில் உர்வசி ரவ்தேலா பளிச்சென்ற வண்ணங்களில் உள்ள அலங்கார ஃகவுனுடன் பங்கேற்றார். அவரின் உடை மட்டும் அல்லாது, கிரிஸ்டல் பதிக்கப்பட்ட கைப்பையுடன் வந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Mamta Srivastav (@elite_showbiz)

இந்த கைப்பைகள் மட்டும் ரூ.4 லட்சத்தை கடந்த விலைக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. “டாபிடி டிபிடி” பாடலால் பிரபலமான இவர், கேமரா முன் அழகாக  போஸ் கொடுத்து ஒட்டுமொத்த விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.