இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மணி நேரமாக ஏர்டெல் நிறுவன சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மணி நேரமாக அழைப்புகள் மேற்கொள்ள முடியாமல் பொது மக்கள் சிரமப்படுகின்றனர். இதே போல நெட்வொர்க் சேவையும் சரியாக இல்லை.

நான்கு மணி நேரத்திற்குள் சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சரி செய்யப்படும் என ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய குழு தெரிவித்துள்ளது. திடீரென ஏர்டெல் நிறுவன சேவை பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர்.