தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதன்மை வேடத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் நிலையில் திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அதன் பிறகு நடிகர் சிம்பு இன்னும் பெயரிடப்படாத 3 படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரிடம் திருமணம் மற்றும் காதல் குறித்து கேட்கப்பட்டது. அதாவது சிம்புவிடம் ஒருவர் உங்களிடம் இரண்டு பெண்கள் பிரபோஸ் செய்கிறார்கள். ஒருவர் கிராமத்து பெண், மற்றொருவர் நகரத்து பெண். நீங்கள் யாரை ஏற்றுக் கொள்வீர்கள் என்று கேட்டனர். அதற்கு சிம்பு கூறியதாவது, நீங்க இப்படி பிரித்து பார்க்காதீர்கள்.

கிராமத்து பெண் நகரத்து பெண் என்று பிரித்துப் பார்ப்பது முதலில் தவறு. ஜீன்ஸ் போடுபவர்கள் அனைவரும் கெட்ட பெண்களும் கிடையாது. சுடிதாரில் இருக்கும் பெண்கள் அனைவரும் நல்ல பெண்களும் கிடையாது. அப்படி நான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம் மட்டும் தான்.  அவர் பெண்ணாக இருந்தால் போதும் என்று கூறினார். மேலும் முன்னதாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விவாகரத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதால் ஒரே ஒருமுறை மட்டும் தான் திருமணம் செய்வேன். அதற்கு ஏற்றபடி பெண் வேண்டுமென்று  கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.