
மலையாள திரைப்பட விமர்சகர் சந்தோஷ் வர்கி, கடந்த சில ஆண்டுகளில் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தவர். ‘அரட்டனன்’ என அழைக்கப்படும் இவர், திரைப்படங்களை விமர்சித்த வீடியோக்களால் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். ஆனால், ஒரு பெண்ணை சமூக ஊடகங்களில் அவதூறாக பேசியதற்காக சமீபத்தில் போலீசார் கைது செய்த சம்பவம், அவரது வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த வழக்கில் 12 நாட்கள் சிறை வாழ்வு அனுபவித்த பிறகு முன் ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.
சிறையிலிருந்து வெளியே வந்தபின், சமூக வலைதளங்களில் செயல்பாடுகளை நிறுத்தி, பொதுமக்கள் இடையே மிகுந்த சோர்வுடனும் அமைதியுடனும் வாழ ஆரம்பித்துள்ளார். இதற்கு முக்கியமான காரணம், கைது செய்யப்பட்டபோது ஊடகத்துறையோ, ரசிகர்களோ இவருக்கு ஆதரவாக எதுவும் செய்யவில்லை என்பதே. இதனால், மனதளவில் பெரிதும் தளர்ந்த சந்தோஷ் வர்கி, பிரபலமான விமர்சகராக சாதாரண நபராக வாழ்ந்துவருகிறார்.
View this post on Instagram
சமீபத்தில், ஒரு பழைய வெள்ளை நிற மாருதி சுஸுகி ஆல்டோ காரில் சந்தோஷ் வர்கி பயணிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இது அவர் தற்போது விலகி வாழ்கிற வாழ்க்கை நிலையை எடுத்துக்காட்டுகிறது. முன்னர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெளியே வந்தாலும் கூட்டம் குவிந்துவிடும் அவர், இப்போது யாருக்கும் தெரியாமல் காரில் முன் இருக்கையில் அமர்ந்து செல்வது சமூக வலைதளங்களில் கவலைக்குரியதாய் பேசப்படுகிறது. தற்போது விற்பனையில் இல்லாத 800 சிசி பழைய ஆல்டோ காரை இவர் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அவரின் வீடியோ சமூகத்தில் பலரும் அவரின் மாற்றத்தையும் தனிமையையும் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.