சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி என்ற தொடரின்  மூலம் பிரபலமானவர் கேப்பிரில்லா செல்லஸ். இவர் ஐரா, காஞ்சனா 3 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கேப்பிரில்லா சுருளி என்ற கேமராமேனை திருமணம் செய்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் கேப்ரில்லாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சமீபத்தில்  கேப்ரில்லா- சுருளி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் கையை பிடித்தவாறு ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்ரில்லா வெளியிட்டுள்ளார்.

மேலும் “உனது அழுகை எனது வலிக்கும் நிம்மதிக்கும் மருந்தாக்கியவளே .. இவ்வுலகம் உனக்கானது மகளே! மருத்துவர்கள் செவிலியர்களுக்கு நன்றி. அவர்கள் இன்றி சுகப்பிரசவம் சாத்தியமில்லை.

எனக்கு அன்பு கொட்டி கொடுக்கும் மக்களின் பிரார்த்தனைக்கும் உயிர் கலந்த நன்றிகள். இந்த தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் என்னுடைய சகோதரிகள் அனைவருக்கும் இந்த தருணம் அமைய வேண்டும் என்பதை இந்த முதல் பிரார்த்தனை ஆக்கிய இறைவனிடம் விதியிடமும் வேண்டிக் கொள்கிறேன்” என கேப்ரில்லா பதிவிட்டுள்ளார்.