சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குமார் மற்றும் அவரது மனைவி முத்துக்கருப்பி, தங்கள் குழந்தைகளுக்கு காதணி விழா நடந்த பணம் சேமித்து வைத்திருந்த பணத்தை கரையான் அரித்துவிட்டது.

இதனால் விழா நடத்த முடியாமல் வேதனையில் தவித்த தம்பதியின் நிலைமை, சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. இதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ், தங்கள் கனவு விழாவை நடத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்த தம்பதியை நேரில் அழைத்து சந்தித்த அவர்களுக்காக ரூ.1 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் ஏற்கனவே மாற்றுத் திறனாளி குழந்தைகள், ஏழை குடும்பங்கள் உள்ளிட்ட பலருக்காக கல்வி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் ஒரு டான்ஸ் மாஸ்டராக தனது பயணத்தைத் தொடங்கிய ராகவா லாரன்ஸ், இன்று முன்னணி நடிகராக மட்டுமல்ல, சமூகத்திற்கு அக்கறை கொண்ட மனம் நிறைந்த நபராகவும் திகழ்கிறார். அவரது இந்த உதவி செயல், சமூகத்தில் உள்ள பிற பிரபலங்களுக்கும் ஒரு உணர்வூட்டும் முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.