சென்னை மாவட்டம் நலம்பூர் பகுதியில் 19 வயதுடைய கல்லூரி மாணவி கடந்த 25-ஆம் தேதி இரவு நேரம் செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கத்தி கூச்சலிட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை செய்து அந்த வாலிபரின் அடையாளத்தை கண்டுபிடித்தனர்.

பின்னர் அவரது மோட்டார் சைக்கிள் நம்பரை வைத்து ஆய்வு செய்ததில் அவர் நீலாங்கரையைச் சேர்ந்த சரத் பாபு(31) என்பது தெரியவந்தது. இவர் நெற்குன்றம் பகுதியில் இருக்கும் சித்தி வீட்டில் தங்கி இருந்து கலெக்ஷன் ஊழியராக வேலை பார்த்தது தெரியவந்தது.

இதனால் சரத்பாபுவை போலீசார் கைது செய்து விசாரித்த போது, ஏற்கனவே ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் சிறைக்கு சென்று ஜாமினில் வெளியே வந்த சரத்பாபு  செல்போனில் பேசிக்கொண்டே நடந்து செல்லும் இளம்பெண்களை குறி வைத்து பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.