ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.

அந்த வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி- வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருந்தார்.

மேலும் ராணுவத்திற்கு முழு சுதந்திரத்தையும் அளித்துள்ளார். இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒளி, ஒலி உச்சி மாநாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்றார். அவர் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச் சிறந்த போராளி. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. இரக்கமற்ற செயல் எனக் கூறியுள்ளார்.