
டெல்லியின் வடக்கு மாவட்டம் குலாபி பாக் பகுதியில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இரவு 8 மணியளவில், பெண்கள் பொது கழிப்பறையின் அருகே நின்றுகொண்டிருந்த இரு சிறுவர்களை எச்சரித்த இரு நபர்கள், கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீபத் மற்றும் நரேஷ் என்ற இருவரும், சிறுவர்களிடம் பெண்கள் கழிப்பறைக்கு இடையூறாக நின்றுகொண்டிருந்ததை தட்டி கேட்டுள்ளனர். இதில் கோபமடைந்த சிறுவர்கள், இருவரும் மீது தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தினர்.
இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து குலாபி பாக் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளை பிடிக்க போலீசார் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் இரு சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது, குற்றஞ்செய்த இவர்கள் மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதும் சம்பவ நாள் கழிப்பறை அருகே கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.