பிரதமர் மோடியுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போதைய எல்லை சூழல் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் எல்லையில் பதற்றமான நிலவுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 6 நபர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.