இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடிகர் டேமியன் தாமஸ் (83) காலமானார். எகிப்தின் இஸ்மெய்லியாவில் பிறந்த இவர், லண்டனில் உள்ள ராயல் அகாடமி ஆஃப் டிராமாட்டிக் ஆர்ட்ஸில் (RADA) பயின்று, திரைப்படத்துறையில் சாதனை புரிந்தார். ஹாமர் பிலிம்ஸ் தயாரித்த ‘Twins of Evil’ படத்தில், பிரபல நடிகர் பீட்டர் குஷிங்கின் எதிரி கேரக்டராக கவுண்ட் கார்ன்ஸ்டைன் கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் பெரும் புகழ் பெற்றார்.

மேலும், ‘Sinbad and the Eye of the Tiger’, ‘Shogun’, ‘Jane Eyre’ உள்ளிட்ட பல பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும், ரோமன் போலன்ஸ்கியின் ‘Pirates’ (1986) திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, இங்கிலாந்தின் வீல்ஷயரில் உள்ள சாலிஸ்பரி ஹாஸ்பிசில் ப்ரோக்ரெஸிவ் சுப்ரானுகிளியர் பால்ஸி என்ற நீடித்த நோயால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். அவருக்கு மனைவி ஜூலியா, மூன்று biological குழந்தைகள் மற்றும் மூன்று step குழந்தைகள் உள்ளனர்.