வழக்கமாக பள்ளி மாணவர்கள் தங்களது புத்தகங்கள், நோட்புக் போன்ற கல்விக்கருவிகளுடன் பள்ளிக்கு செல்வது வழக்கம். ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பள்ளியில் படிக்கும் ஒரு மாணவர் தனது துணைப் பையில் பாம்பை கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்த பாம்பை வகுப்பறையின் உள்ளே வைத்து கையில் பிடித்து விளையாடுவதும் காணப்படுகிறது. ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போதும், அந்த மாணவர் பின்புற பெஞ்சில் அமர்ந்து பாம்புடன் விளையாடியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ._. <3 (@_aa_okkati_adakku_)

பாம்பை கையில் வைத்துக் கொண்டே விளையாடிய மாணவர், ஒரு கட்டத்தில் பாம்பை மற்றொரு மாணவர் மீது வீசுகிறார். மேலும், அந்த பாம்பு மாணவரின் விரலை சுமார் 2-3 முறை தாக்கியது வீடியோவில் தெளிவாக காணப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை @aa_okkati_adakku என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பதிவிட்டுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் அந்த மாணவரின் செயல் மிகவும் பொறுப்பற்றது என்றும், பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

சிலர் பாம்பு போலியானது என சந்தேகம் வெளியிட்டாலும், அதிகமானோர் அது உண்மையான பாம்பே என உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் எந்த பள்ளியில் நடந்தது என்பது தற்போது வரை தெரியவில்லை என்றாலும், இது போன்ற செயல்கள் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.