மத்திய மந்திரி அமித்ஷா அண்ணாமலை இனி தேசிய அரசியலில் ஈடுபடுவார் என்று கூறியுள்ளார். அதாவது தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு அண்ணாமலை மிக முக்கிய பங்கு வகித்துள்ளதால் அவரை பாஜக கைவிடாது எனவும் கண்டிப்பாக இனி தேசிய அரசியலில் அவர் ஈடுபடுவார் என்றும் உறுதி கொடுத்தார். தமிழ்நாட்டின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியும் உறுதியாகிவிட்டது. இந்நிலையில் அண்ணாமலை தேசிய அரசியலில் ஈடுபடுவார் என்று அமித்ஷா சொன்னதால் அவர் மத்திய அமைச்சர் ஆக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அதன்படி அண்ணாமலைக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்கப்பட இருப்பதாகவும் தற்போது மத்திய மந்திரி ஆக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் ஆளுநராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது தமிழக ஆளுநர் ரவியின் பதவி காலம் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் புதிய ஆளுநர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதன் காரணமாக ஆளுநர் பொறுப்பு எல் முருகனுக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில் அது எந்த மாநிலத்திற்கு என்ற தகவல் சரிவர தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.