பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் டெல்லிக்கு சென்ற நிலையில் மீண்டும் டெல்லி சொல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தன் பதவியை ராஜினாமா செய்வேன் என்கிறார். தற்போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் அண்ணாமலை மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை தற்போது மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஜே.பி நட்டாவை நேரில் சந்திக்கிறாராம். மேலும் அதிமுகவுடன் கூட்டணி மற்றும் மாநில தலைவர் பொறுப்பு உள்ளிட்டவைகள் குறித்து அண்ணாமலை பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.