தமிழக அரசு சார்பாக பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுடைய முன்னேற்றத்திற்காக புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் திட்டம், மகளிர் இலவச பேருந்து திட்டம் என பல்வேறு திட்டங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் ஆதரவற்ற பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி அளிக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம். இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறுபவர்கள் உதவித்தொகை பெற கல்வி தகுதி எதுவும் அவசியம் இல்லை. படிக்காத பெண்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் .

அவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு ஒரு சவரன் தங்க நாணயமும் வழங்கப்படும். டிகிரி முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் தாலிக்கு ஒரு சவரன் தங்க நாணயமும் வழங்கப்படும். விண்ணப்பதாரர் பெற்றோரால் கைவிடப்பட்ட  அல்லது பெற்றோரை இழந்தவராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். மணமகனுக்கு 21 வயதும் மணமகளுக்கு 18 வயது குறையாமலும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் உச்சவரம்பு இல்லை.

இந்த உதவி தொகை பெறுவதற்கு திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும். திருமண அழைப்பிதழ், சாதி சான்றிதழ், பாதுகாவலர்கள் வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டா, பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், டிகிரி சான்றிதழ், பேங்க் பாஸ்புக், மணமகன் மற்றும் மணமகளின் வயது சான்றிதழ் ஆகியவை அவசியம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.