
ஐபிஎல் தொடரின் 18 ஆவது சீசனானது இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டி எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடும் ,ஆரவாரத்தோடும் ஒவ்வொரு நாளும் போட்டியை கண்டுகளித்து வருகிறார்கள். இப்படி போட்டியை பார்ப்பதற்கு ரசிகர்கள் சென்றாலும் ஒரு சிலர் மோசமான செயல்களில் ஈடுபடுவதற்காகவே செல்கிறார்கள் என்று சொல்லலாம்.
அந்த வகையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே- ஆர்சிபி போட்டியின் போது ரசிகர்களுடைய செல்போன் திருட்டு போய் உள்ள.து இதனை அடுத்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் செல்போன்களை திருடிய எட்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 36 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.