தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனரின்  பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர் குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலை நேற்று இரவு திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய உடல் நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், நடிகைகள் பலரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து இவர் குறித்த பல தகவல்கள் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தில் பணியாற்றி இருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. எந்திரன் படத்தில் இயக்குனர் சங்கருக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த்-க்கு மனோஜ் டூப்பாக நடித்துள்ளார் அவர் எந்திரன் படத்தில் பணியாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சங்கர் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் எந்திரன்.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.